விளையாட்டு

  • associate partner

ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்துள்ளனர்.

ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
ராஜஸ்தான் வீரர்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 9:43 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 12-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிவருகின்றன. டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியில் ஷப்மேன் கில், சுனில் நரேன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 15 ரன்கள் எடுத்திருந்தநிலையில், சுனில் நரேன் உனத்கட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, நிதிஷ் ரானா களமிறங்கினார். அவரும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, அன்ட்ரி ரஸ்ஸல் களமிறங்கினார்.

அதனையடுத்து, கில் 47 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரஸ்ஸல் 24 ரன்களும், மோர்கன் 34 ரன்களும் எடுத்தனர்.

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:

ஆட்டநேர இறுதியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading