முகப்பு /செய்தி /விளையாட்டு / மிக மோசமான பேட்டிங்: 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி படுதோல்வி

மிக மோசமான பேட்டிங்: 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி படுதோல்வி

பெங்களூரு வீரர்கள்

பெங்களூரு வீரர்கள்

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

  • Last Updated :

ஐ.பி.எல் தொடரின் 28-வது போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷப்மேன் கில் மற்றும் டாம் பேன்டன் களமிறங்கினர். பேன்டன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷப்மேன் கில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மோர்கன் 8 ரன்களிலும் கேப்டன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

தொடர்ந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன்மூலம் பெங்களூர் அணியிடம் 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி படுதோல்வியடைந்தது.

top videos
    First published:

    Tags: IPL 2020, RCB