விளையாட்டு

  • associate partner

SRHvsKKR | 2 ரன்களில் சுருண்ட சன்ரைசர்ஸ்... கொல்கத்தா அணி அபார வெற்றி

IPL 2020 | ஃபெர்குசன் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னர் மற்றும் சமத் ஆகிய 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

SRHvsKKR | 2 ரன்களில் சுருண்ட சன்ரைசர்ஸ்... கொல்கத்தா அணி அபார வெற்றி
IPL 2020
  • Share this:
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 35-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணிகள் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், திரிபாதி களமிறங்கினர். நிதானமாக விளையாடி இந்த ஜோடி 48 ரன்கள் எடுத்திருந்த போது திரிபதி 23 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் அவுட்டானர். சுப்மன் கில் 36 ரன்னிலும், நித்திஷ் ராணா 29 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.


சன்ரைசர்ஸ் அணியின் மற்ற வீரர்களும் அதிரடி காட்ட தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பேரிஸ்டோவ், கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக விளையாடினர். நடுவரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடததால் அந்த அணி இலக்கை எட்ட தடுமாறியது.

கேப்டன் வார்னர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில், ரஷல் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை நோ பால் வீசியதால் கொல்கத்தா அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை சிறப்பாக எதிர்கொண்ட வார்னர் ஹட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வார்னரால் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணி சார்பில் ஃபெர்குசன் சூப்பர் ஓவரை வீசினார். இந்த போட்டியில் ஃபெர்குசன் 4 ஓவர் வீசி 15 ரன்களள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனால் சூப்பர் ஃபெர்குசனிடம் கொடுக்கப்பட்டது.  அற்புதமாக பந்துவீசிய ஃபெர்குசன் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னர் மற்றும் சமத் ஆகிய 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் சன்ரைசர்ஸ் அணி சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.  சூப்பர் ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ரஷித் கான் சூப்பர் ஓவரை வீசினார்.  கொல்கத்தா 4 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை சேர்த்து எளிதில் வெற்றி பெற்றது.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading