டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 2020 தொடரின் 42-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டள்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், நிதிஷ் ராணா களமிறங்கினார். கொல்கத்த அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் சுப்மன் கில் (9), திரிபதி (13), தினேஷ் கார்த்தி (3) ஆகியோரை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுனில் நரைன், ரானா உடன் பார்ட்னர் ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்.
அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் கடைசி ஒவர்களில் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க வீரர் ரானா 81 ரன்கள் குவித்து அவுட்டானார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 194 ரன்கள் எடுத்து வலுவான நிலைக்கு சென்றது.
இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைந்தது. ராஹனே ரன் ஏதும் எடுக்காமலும், சதம் நாயகன் தவான் 6 ரன்னிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகினர்.
டெல்லி அணியின் மற்ற வீரர்களை தனது சுழற்பந்தில் சிக்கவைத்து வெளியேற்றினார் வருண் சக்கரவார்த்தி. சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி டெல்லி அணியின் முக்கிய 5 விக்கெட்களை சாய்த்தார். இறுதியாக கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.