விளையாட்டு

  • associate partner

SRHvsKKR | பரபரப்பான கொல்கத்தா - சன்ரைசர்ஸ் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது

SRHvsKKR | பரபரப்பான கொல்கத்தா - சன்ரைசர்ஸ் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் 35-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணிகள் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், திரிபாதி களமிறங்கினர். நிதானமாக விளையாடி இந்த ஜோடி 48 ரன்கள் எடுத்திருந்த போது திரிபதி 23 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் அவுட்டானர். சுப்மன் கில் 36 ரன்னிலும், நித்திஷ் ராணா 29 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

சன்ரைசர்ஸ் அணியின் மற்ற வீரர்களும் அதிரடி காட்ட தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பேரிஸ்டோவ், கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக விளையாடினர். நடுவரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடததால் அந்த அணி இலக்கை எட்ட தடுமாறியது.

கேப்டன் வார்னர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டார். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் போட்டி சூப்பர் ஒவருக்கு சென்றது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading