முகப்பு /செய்தி /விளையாட்டு / #IPL2020 | நேற்றைய போட்டியின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்.. 200-வது சிக்ஸர் அடித்த ரோஹித்..

#IPL2020 | நேற்றைய போட்டியின் சுவாரஸ்யமான நிகழ்வுகள்.. 200-வது சிக்ஸர் அடித்த ரோஹித்..

ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ச் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஷேசன் ஹோல்டரை களமிறக்குவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ரோஹித் ஷர்மாவின் அதிரடியால் கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி. 54 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 80 ரன்கள் குவித்தார். 14 வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரோஹித் ஐபிஎல் அரங்கில் தனது 200 வது சிக்ஸரை பதிவு செய்தார். இதன் மூலம் அதிக சிக்ஸ் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடம்பிடித்துள்ளார். 

அத்துடன் ஐபிஎல் அரங்கில் 37 அரை சதங்கள் நிறைவு செய்து அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இன்னும் ஒரு அரை சதம் அடித்தால் ரெய்னாவின் 38 அரை சதத்தை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஆட்டத்தின் 19-வது ஓவரின் மூன்றாவது பந்தை ரஸல் வீச அதை தடுக்க முயலும் ஹர்த்திக் பாண்டியாவின் பேட் ஸ்டெம்பை தாக்கி ஹிட் அவுட் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஐபிஎல் அரங்கில் ஹிட் விக்கெட் மூலம் ஆட்டமிழக்கும் 10 வது வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் ஹர்த்திக் பாண்டியா.

Also read... ஐ.பி.எல் 2020 தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

3. இயான் மார்கன் அதிரடியாக விளையாடி அணியை சர்விலிருந்து மீட்டுவிடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் அமர்ந்திருக்க பும்ரா வீசிய பந்தை பவுண்டரிக்கும் விரட்ட முயலும் போது பந்து நெஞ்சில் பட்டு ஸ்டெம்பை தாக்கிவிடும். பெய்ல்ஸ் கீழே விலாததால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். இருப்பினும் 16 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

4. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடக்க போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்துள்ளது. 2013ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக தொடரை வெற்றியுடன் தொடங்கிய கொல்கத்தா நடப்பாண்டு தோல்வியுடன் தொடங்கியுள்ளது.

5. சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ச் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஷேசன் ஹோல்டரை களமிறக்குவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

First published:

Tags: IPL, IPL 2020