அபுதாபியில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா அணி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
செப்டம்பர் 19-ம் தேதியே ஐ.பி.எல். போட்டி தொடங்கிவிட்டாலும் கொல்கத்தா அணிக்கு இதுதான் முதல் போட்டி. இதனால் அந்த அணியின் ஆடும் லெவனில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்கு தலைமை வகிக்கிறார்.
கடந்த ஆண்டு புள்ளிகள் அடிப்படையில் 4-ம் இடம் பிடித்த போதும் நெட் ரன்ரேட் காரணமாக கொல்கத்தா அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் போனது. இம்முறை பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் வலுவான அணியாகவே கொல்கத்தா காணப்படுகிறது.
உத்தப்பா மற்றும் கிறிஸ் லின் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை அணிக்கு சென்றுவிட்டதால் இம்முறை சுனில் நரைனுடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன் டவுனில் களமிறங்க மோர்கன் காத்திருக்கிறார். அதிரடியில் மிரட்ட ரஸல் உள்ளார். இதேபோல் பந்துவீச்சில் அணிக்கு வலுசேர்க்க பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோடியும் காத்துள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் இருப்பது கூடுதல் பலம்.
SCHEDULE TIME TABLE:
தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் மும்பை வீரர்கள் உள்ளனர். வலிமையான கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைவது முக்கியம். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா முந்தைய காலங்களில் கொல்கத்தா அணிக்கு எதிராக பேட்டிங்கில் நடத்திய ருத்ரதாண்டவத்தை இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்க்கலாம்.
POINTS TABLE:
நடுவரிசை வீரர்களான சூர்ய குமார் யாதவ், பொல்லார்டு, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தங்களது பங்களிப்பை அணிக்கு வழங்கியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மலிங்கா இந்த ஐ.பி.எல். தொடரில் இடம்பெறாதது மும்பை அணிக்கு பந்துவீச்சில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு எடுபடாமல் போனது அணிக்கு சற்று ஏமாற்றம்தான். இதனால் டிரெண்ட் பவுல்ட் மற்றும் பேட்டிசனை நம்பியே மும்பை அணியின் பந்துவீச்சு உள்ளது.
இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்குநேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 19 போட்டியிலும் கொல்கத்தா அணி 6 போட்டிகளிலும் வென்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2020