விளையாட்டு

  • associate partner

MI vs KKR | தொடக்கத்தில் தடுமாற்றம்... இறுதியில் அதிரடி... மும்பை அணிக்கு 149 ரன்கள் வெற்றி இலக்கு

KKRvsMI | கொல்கத்தா அணியின் கேப்டன் மார்கன் மற்றும் கம்மின்ஸ் இறுதி ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

MI vs KKR | தொடக்கத்தில் தடுமாற்றம்... இறுதியில் அதிரடி... மும்பை அணிக்கு 149 ரன்கள் வெற்றி இலக்கு
KKRvsMI
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் இன்றையப் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 148 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 32-வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக திரிபதி மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி மும்பை அணி பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.


திரிபதி 7 ரன்களிலும், ராணா 5 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறிறனர். கொல்கத்தா அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து வந்த வீரர்களும் சோபிக்கவில்லை. அதிகம் எதிர்பார்த்த ரஷலும் 12 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டனார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் மார்கன் மற்றும் கம்மின்ஸ் இறுதி ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading