முகப்பு /செய்தி /விளையாட்டு / KKR vs MI | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... மாற்றமில்லா மும்பை.. புதுப்பொலிவுடன் கொல்கத்தா

KKR vs MI | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... மாற்றமில்லா மும்பை.. புதுப்பொலிவுடன் கொல்கத்தா

KKR vs MI

KKR vs MI

IPL 2020 | KKRvsMI | கொல்கத்தா அணி இன்றையப் போட்டி தான் தொடக்க போட்டி என்பது குறிப்பிடதக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் 2020 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்தி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 5-வது போட்டியில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸூக்கு பின் பேசிய தினேஷ் கார்த்திக், “நாங்கள் முதல் போட்டியை பார்த்தோம். அதனால் தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளோம். இன்று முதல் போட்டி தொடங்கி உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களுடன் நாங்கள் களமிறங்க உள்ளோம்“ என்றார்.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “மீண்டும் பழைய தவறு நடக்காது. எங்கள் அணியில் எந்த மாற்றமுமில்லை. மலிங்கா போன்ற சிறந்த வீரர் இல்லையென்றாலும் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம்“ என்றுள்ளார்.

SCHEDULE TIME TABLE:

கொல்கத்தா அணி : சுனில் நரைன், சுப்மான் கில், நிதீஷ் ராணா, ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், சிவம் மாவி

மும்பை அணி : ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹார்டிக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

First published:

Tags: IPL 2020