முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐ.பி.எல் 2020 இன்று.... பஞ்சாப் - பெங்களூரு அணியின் பலம், பலவீனம் என்ன?

ஐ.பி.எல் 2020 இன்று.... பஞ்சாப் - பெங்களூரு அணியின் பலம், பலவீனம் என்ன?

KXIPvsRCB

KXIPvsRCB

ராகுல், கருண் நாயர், பூரண், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வலுவான பேட்டிங் வரிசை கொண்ட பெங்களூருவை சமாளிக்க முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரவு 7:30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்டலிடம் சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நடுவரின் தவறான முடிவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதை மறுக்க முடியாது என்ற போதும் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே நிதர்சனம். மயங்க் அகர்வால் தவிர்த்து யாரும் மிகப்பெரிய பங்களிப்பை பேட்டிங்கில் வழங்கவில்லை.

ராகுல், கருண் நாயர், பூரண், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வலுவான பேட்டிங் வரிசை கொண்ட பெங்களூருவை சமாளிக்க முடியும். காரணம் கோலி, டிவில்லியர்ஸ், பிஞ்ச் ஆகிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுடன் தேவ்தத் படிக்கல் என்ற இளம் வீரரும் பெங்களூரு அணியில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, காட்ரெல் ஆகியோருடன் இளம் வீரர் பிஷ்னாயும் இருக்கிறார்.

பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்தில் உள்ளது. ஐதராபாத்துக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் சாஹலின் பந்துவீச்சு. 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை அவர் ஏற்படுத்தினார்.

ORANGE CAP:

அவரது மாயஜால பந்துவீச்சு இன்றைய போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு பக்கபலமாக ஸ்டெய்ன், சைனி, ஷிவம் துபே ஆகியோர் இருக்கின்றனர். உமேஷ் யாதவ் சோபிக்காதது அந்த அணிக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிளேயிங் லெவனில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

PURPLE CAP:

இரு அணிகளும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தலா 12 போட்டிகளில் வென்றுள்ளன.

First published:

Tags: IPL 2020