விளையாட்டு

  • associate partner

IPL 2020 | டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

IPL 2020 | DCvKXIP | டெல்லி- பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

IPL 2020 | டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 7:22 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 2-வது போட்டி துபாயில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.


டெல்லி- பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி 10 ஆட்டங்களிலும் பஞ்சாப் 14- ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணியை ஸ்ரேயாஸ் அய்யரும் பஞ்சாப் அணியை கே.எல்.ராகுலும் வழிநடத்த உள்ளனர். இரு இளம் கேப்டன்கள் தலைமையிலான அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் : லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், கருண் நாயர், சர்பராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்ப கவுதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டன் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி

டெல்லி கேப்பிட்டள்ஸ் : ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், சிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ், ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்தே, மோஹித் சர்மா
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading