டிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்

தோனி

நேற்றைய போட்டியில் நடைபெற்ற சுவாரஷ்யமான நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பில்.

 • Share this:
  ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். தடைகளை தாண்டி கிரிக்கெட் உலகின் மாபெரும் திருவிழாவான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்திகாட்டியுள்ளது. அந்தவகையில் அபுதாபியில் தொடங்கிய 13 வது தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியண்ஸ் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடிய முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 400 நாட்களுக்கு மேலாக களத்தில் பார்க்கமுடியாமல் இருந்த தோனி, சிங்கம் சூர்யா ஸ்டெயில் மீசையுடன் கெத்தாக களமிறங்கி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் திகைக்கவைத்தார்.

  கொரோனா கால ஐபிஎல் போட்டி என்பதால் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் டாஸ் சுண்டப்பட்டதே ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.

  நேற்றைய போட்டியில் இரண்டு சகோதரர்கள் களமிறங்கினர். மும்பை இண்டியன்ஸ் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா, குரூநல் பாண்டியா மற்றும் சி.எஸ்.கே வீரர் தீபர்சஹர், மும்பை இண்டியன்ஸ் வீரர் ராகுல் சஹர் என பாண்டியா, சஹர் சகோதரர்கள் களமாடினர்.

  13 வது சீசனின் முதல் பந்தை தீபக் சஹர் வீசினார். மூன்றாவது முறையாக தீபக் சஹர் தொடரின் முதல் பந்தை வீசுகிறார். அதை பவுண்டரிக்கு விளாசி தொடரை அதிரடியுடன் தொடங்கினார் ரோஹித்.

  ஆட்டத்தின் 14 வது ஓவரில் ஜடேஜா விசிய பந்தை சிக்ஸருக்கு விளாசினார் திவாரி. பவுண்டரி எல்லையிலிருந்து அந்தரத்தில் பறந்து அற்புதமாக கேட்ச் பிடித்து திவாரியை வெளியேற்றினார் டுபிளஸிஸ்.  நடப்பு தொடரின் முதல் அரைசதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு பதிவு செய்தார். 48 பந்துகள் எதிர்கொண்ட ராயுடு 3 சிக்ஸ், 6 பவுண்டரிகள் விளாசி 71 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

  தோனி எதிர்கொண்ட முதல் பந்தே அவருக்கு ஆபத்தாக மாறியது. தவறான முறையில் களநடுவர் அவுட் வழங்க அதை தனக்கே உரித்தான பாணியில் ரிவியூ கேட்டு அதை வென்றும் காட்டினார் கேப்டன் தோனி.


  ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டதால் வீரர்களை உற்சாகப்படுத்த பவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாசும் போதும், விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும் ரசிகர்களின் உற்சாக குரல் ஆடியோ வடிவில் ஒலிபரப்பப்பட்டது.
  Published by:Karthick S
  First published: