விளையாட்டு

  • associate partner

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத்

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய ஹைதராபாத்
ஐ.பி.எல்
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் 52-வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சஹா ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய வார்னர் 8 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மணிஷ் பாண்டே களமிறங்கினார்.

அவரும், 26 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். விரித்திமான் சாஹாவும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக களமிறங்கிய ஜேஷன் ஹோல்டர் அதிரடியாக ஆடி 26 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP: RESULT DATA:

MOST SIXES:
அதன்மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading