விளையாட்டு

  • associate partner

மாயந்தி லாங்கர் இல்லை, பாவனா உண்டு... ஐ.பி.எல் தொகுப்பாளர்கள் யார், யார்?

IPL 2020 | நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் பிரபல தொகுப்பாளினி மாயந்தி லங்கர் இடம்பெறவில்லை என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

மாயந்தி லாங்கர் இல்லை, பாவனா உண்டு... ஐ.பி.எல் தொகுப்பாளர்கள் யார், யார்?
பாவனா - மாயந்தி லாங்கர்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 8:53 PM IST
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் தொகுப்பாளர்கள் மற்றும் வருணையாளர்கள் யார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் மாயந்தி லங்கர் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

ஐ.பி.எல் 2020 தொடர் நாளை (செப்.19) அபுதாபி மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஐ.பி.எல் போட்டி முதன்முறையாக ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ஆர்வலர்கள் டிவி அல்லது ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்க்க உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளின் போது ஒரு முக்கியமான பாத்திரமாக தொகுப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் தங்கள் கமெண்டுகளை ஆற்றல்மிக்க வர்ணனையுடன் வெளிப்படுத்தி விளையாட்டுக்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்க்க உதவுவார்கள். இந்த ஆண்டில் ஐ.பி.எல் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' தொகுப்பாளர்கள் மற்றும் வழங்குநர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் பிரபல தொகுப்பாளினி மாயந்தி லங்கர் இடம்பெறவில்லை என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழில் ஐ.பி.எல் தொடர்களை தொகுத்து வழங்கும் பாவானா பாலாகிருஷ்ணன் இந்தாண்டும் தொகுத்து வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமெண்டர்கள் : ஹர்ஷா போக்லே, சைமன் டவுல், இயன் பிஷப், மைக்கேல் ஸ்லேட்டர், டேனி மோரிசன், டீப் தாஸ்குப்தா, ரோஹன் கவாஸ்கர், பொம்மி ம்பாங்வா, டேரன் கங்கா, எல் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், சுனில் கவாஸ்கர், கெவின் பீட்டர்லேசன், குமார் சங்கக்கார மற்றும் ஜே.பி. டுமினி.

இந்தி தொகுப்பாளர்கள் குழு: ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், கௌதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, நிகில் சோப்ரா, சந்தீப் பாட்டீல், சஞ்சய் பங்கர், அஜித் அகர்கர் மற்றும் கிரண் மோர்.தொகுப்பாளர்கள் : சுரேன் சுந்தரம், கிரா நாராயணன், சுஹைல் சந்தோக், நாஷ்பிரீத் கவுர், சஞ்சனா கணேசன், ஜடின் சப்ரு, தான்யா புரோஹித், அனந்த் தியாகி, தீரஜ் ஜுன்ஜா மற்றும் நெரோலி மெடோஸ்.

ஐபிஎல் 2020 போட்டியில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜே.பி. டுமினி முதல் முறையாக கமெண்ட்டராக அறிமுகமாக இருக்கிறார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading