ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியில் மும்பையை வெல்ல 3 சுவாரஸ்ய நிகழ்வுகள் டெல்லி அணிக்கு சாதகமாக உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு ஐ.பி.எல். தொடரின் இறுதி யுத்தம் நடைபெற உள்ளது. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ள டெல்லி கேப்பிடல்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் மும்பை அணி பலம் வாய்ந்தாக உள்ளது. டெல்லி அணி போராடி வெற்றி பெற வாய்ப்பிருந்தாலும் கடந்த ஐ.பி.எல் சீசன்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சில தற்போது டெல்லி அணிக்கு சாதகமாக உள்ளது.
ஒற்றைப்படை வருடம்
2013, 2015, 2017, 2019 என ஒற்றைப்படையிலான ஆண்டுகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. இரட்டைப்படையிலான வருடத்தில் மும்பை அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை.
லீப் வருடம்
ஐ.பி.எல் 2008-ம் தெடாங்கிய போதே லீப் வருடமாக அமைந்தது. லீப் வருடங்களில் 2008 ராஜஸ்தான் அணியும், 2012 கொல்கத்தா அணியும், 2016 சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் வெற்றி பெற்றது.
டி20-ல் இரட்டைப்படை சாதகம் இல்லாத ரோஹித்
ரோஹித் சர்மா ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்றிருந்தாலும் இரட்டைப்படையில் டி20 ரோஹித் சர்மா வெற்றி பெற்றதில்லை. 2017-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்திய அணி வென்றது. அந்த அணியில் ரோஹித் சர்மா வெற்றி பெற்றார். ஆனால் இரட்டைப்படை வருடமான 2014 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி இறுதிப்போட்டியில் தவறவிட்டது.
இந்த அனைத்து விமர்சனங்களையும் உடைத்தெறிந்து ரோஹித் சர்மா டி20 கோப்பை வெல்வாரா என ரசிகர்கள் பலர் ஆவலாக உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்