விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் வரலாற்றில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்..!

IPL 2020 Final | MIvsDC | கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தால் மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஐ.பி.எல் வரலாற்றில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்..!
  • News18 Tamil
  • Last Updated: November 10, 2020, 11:07 PM IST
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.

ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரோயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோனிஷ், ஷிகார் தவான் களமிறங்கினார்கள். ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிறப்பான தொக்கத்தை கொடுத்த இந்த ஜோடி இன்றையப் போட்டியில் ஜொலிக்க தவறிவிட்டனர்.


 

மார்க்ஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்துவந்த ராஹனேவும் 2 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அணிக்கு நம்பிக்கையாக இருந்த தவானும் 15 பந்துகளில் ஜெயந்த் ஜாதவ் சுழலில் சிக்கினார். டெல்லி அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் - ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புணர்ந்து நிதானமாக விளையாடினர். இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் தடுமாற்றத்திலிருந்து மீண்டது. ரிஷப் பந்து 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஹிட்மேன் ரோஹித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி டெல்லி அணியின் சாம்பியன் கனவை தகர்த்தார்.

மும்பை அணி டாப் ஆர்டர்கள் பேட்ஸ்மேன்கள் டீ-காக் (20), சூர்யகுமார் யாதவ் (19), பொல்லார்டு (9) ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தால் மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 51 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 68 ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியாக மும்பை அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை கைப்பற்றியது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading