விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 : சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்..?

IPL 2020 Final, MI vs DC: இரு அணிகளும் நடப்பு தொடரில் மோதிய 3 போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் 2020 : சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்..?
MIvsDC
  • Share this:
நடப்பு ஐ.பி.எல். தொடர் கிளைமேக்சை எட்டிவிட்டது. கொரோனா கால ஐ.பி.எல்.-ல் வென்று மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு ஐ.பி.எல். தொடரின் இறுதி யுத்தம் நடைபெற உள்ளது. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ள டெல்லி கேப்பிடல்சை எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் மும்பை அணி இந்த தொடர் முழுவதுமே அசத்தலாக விளையாடியுள்ளது. வழக்கமான ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் சிறப்பாக விளையாடுவார்கள் என்று தங்கள் மீது இருந்த முத்திரைர்யை அவர்கள் கிழித்து எரிந்துள்ளனர். லீக் சுற்றுப் போட்டிகளில் ஐதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டம் தவிர்த்து மற்ற எல்லா போட்டிகளிலுமே அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

டி காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பாண்டியா சகோதரர்கள், பொல்லார்டு என மும்பை அணியின் பேட்டிங் வரிசை நீள்கிறது. பந்துவீச்சிலும் பவர்பிளேக்கு பும்ரா, பவுல்ட், மிடில் ஓவர்களுக்கு குருணால் பாண்டியா, ராகுல் சாஹர், நைல் டெத் ஓவர்களின் மிரட்ட மீண்டும் பும்ரா, பவுல்ட், பகுதிநேர பந்துவீச்சாளராக பொல்லார்டு என மிரட்டுகின்றனர்.


முதல் தகுதிச்சுற்றுப் போட்டியின் போது காயமடைந்த பவுல்ட் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வீரரை மட்டுமே நம்பியிருக்காதது தான் மும்பை அணியின் பலமே. இதைத்தான் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் கேப்டன் ரோஹித் சர்மா தங்களின் பலமாக குறிப்பிட்டார். அனைத்து வகையிலும் வலுவான அணியாக இருப்பதும், ஏற்கெனவே 5 முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அனுபவமும் இருப்பது மும்பை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நடப்பு தொடரில் மோதிய 3 போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. இது மனதளவில் அந்த அணி வீரர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் டெல்லி அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுக்க வேண்டியது கட்டாயம்.

தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என கணிக்கப்பட்ட அணி டெல்லி. இளம் வீரர்களைக் கொண்ட அந்த அணி ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இடையில் சிறிய சறுக்கலை சந்தித்தாலும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பியுள்ளது. அந்தப் போட்டியில் பல மாற்றங்களை செய்து வெற்றியை வசப்படுத்தினர் டெல்லி வீரர்கள்.ஸ்டாய்னிசை தொடக்க வீரராக களமிறக்கியது மற்றும் முக்கிய கட்டத்தில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கியது என கேப்டன்சியில் தனது திறமையை நிரூபித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். தவணின் அசத்தலான பார்ம், அணிக்கு நிச்சயம் பலம் சேர்த்துள்ளது. இதேபோல் நடப்பு தொடரில் அசுரத்தனமான பந்துவீச்சை கொண்டுள்ள அணியும் டெல்லிதான். இதற்கு உதாரணமாக பர்ப்பிள் கேப்புக்கான போட்டியில் ரபடா முன்னிலை வகிப்பதை குறிப்பிடலாம்.

இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை 15 போட்டிகளிலும் டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading