ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

MIvsDC | ஐ.பி.எல் 2020 சாம்பியன் பட்டத்தை வெல்ல மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்கு

MIvsDC | ஐ.பி.எல் 2020 சாம்பியன் பட்டத்தை வெல்ல மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்கு

MIvsDC

MIvsDC

IPL 2020 Final | MIvsDC | டெல்லி அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஐ.பி.எல் 2020 சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாக மும்பை அணி வெல்வதற்கு 157 ரன்கள் இலக்காக நிர்ண்யக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரோயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோனிஷ், ஷிகார் தவான் களமிறங்கினார்கள். ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிறப்பான தொக்கத்தை கொடுத்த இந்த ஜோடி இன்றையப் போட்டியில் ஜொலிக்க தவறிவிட்டனர்.

மார்க்ஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்துவந்த ராஹனேவும் 2 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அணிக்கு நம்பிக்கையாக இருந்த தவானும் 15 பந்துகளில் ஜெயந்த் ஜாதவ் சுழலில் சிக்கினார். டெல்லி அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் - ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புணர்ந்து நிதானமாக விளையாடினர். இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் தடுமாற்றத்திலிருந்து மீண்டது. ரிஷப் பந்து 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி சார்பில் போல்ட் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் ஐ.பி.எல் 2020 சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் மும்பை அணி விளையாடி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published:

Tags: IPL 2020