விளையாட்டு

  • associate partner

IPL 2020 Final | டெல்லி அணி பேட்டிங் தேர்வு... மும்பை அணியில் முக்கிய மாற்றம்

IPL 2020 | MIvsDC | இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை 15 போட்டிகளிலும் டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

IPL 2020 Final | டெல்லி அணி பேட்டிங் தேர்வு... மும்பை அணியில் முக்கிய மாற்றம்
MIvsDC
  • Share this:
ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டி மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். கடைசி போட்டியில் ஆடிய அதே அணியே இந்தப் போட்டியில் களமிறங்குவதாகவும், எந்த மாற்றமும் இல்லை என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்துள்ளோம். ராகுல் சஹாருக்கு பதிலாக ஜெயந்த ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் இடதுகை வீரர்கள் சற்று அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை 15 போட்டிகளிலும் டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.









ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading