விளையாட்டு

  • associate partner

கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் விலகல்

2018-ம் கொல்கத்தா அணயின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக் ஏற்றார்.

கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் விலகல்
தினேஷ் கார்த்திக்
  • Share this:
கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்தி திடீரென விலகி உள்ளார். அந்த அணியின் புதிய கேப்டன் பொறுப்பை இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் ஏற்க உள்ளார்.

ஐ.பி.எல் கோப்பையை 2 முறை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுதாகவும், கேப்டன் பொறுப்பை இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனிடம் வழங்குமாறு கூறியதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக இயன் மார்கன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினேஷ் கார்த்திக் தற்போதைய ஐ.பி.எல் சீசனில் 7 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் மீது பலர் விமர்சனம் செய்த நிலையில் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி உள்ளார்.

2018-ம் கொல்கத்தா அணயின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக் ஏற்றார். 2018 மற்றும் 2019 ஐ.பி.எல் சீசனில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டார். கொல்கத்தா அணி கடந்த சீசனில் 5-வது இடத்தை பிடித்ததால் தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி உள்ள நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading