விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 விறுவிறு... ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சிறப்பு சலுகை

IPL 2020 | நாளை ஐ.பி.எல் தொடங்க உள்ள நிலையில் அவர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

ஐ.பி.எல் 2020 விறுவிறு... ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சிறப்பு சலுகை
Eng VS Aus
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 1:58 PM IST
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் ஐ.பி.எல் 2020 தொடர் நாளை அபுதாபியல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன்பின்னரே பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அமீரகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். நாளை ஐ.பி.எல் தொடங்க உள்ள நிலையில் அவர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.


இதையடுத்து இங்கிலாந்து தொடரை முடித்து திரும்பி உள்ள இருநாட்டு வீரர்களும் நட்சத்திர ஹோட்டலில் 36 மணி நேரம் மட்டும் தனிமைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அனைத்து வீரர்களும் அந்தந்த அணிகளுடன் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading