விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 : அஸ்வினின் சி.எஸ்.கே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டுவைன் பிராவோ!

IPL 2020 | CSK | பிராவோவிற்கு அஸ்வினின் சாதனையை முறியடிக்க 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

ஐ.பி.எல் 2020 : அஸ்வினின் சி.எஸ்.கே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டுவைன் பிராவோ!
டுவைன் பிராவோ
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 6:52 PM IST
  • Share this:
நடப்பு ஐ.பி.எல் தொடரில் முன்னாள் சி.எஸ்.கே அணியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வினிடமிருந்து பிராவோ தட்டி செல்ல உள்ளார். பிராவோ அந்த பெருமையை தட்டிச் செல்ல அவர் 3 விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே போதும்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடிக்க சி.எஸ்.கே-க்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீரரான பிராவோ வர இருக்கிறார். மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டரான பிராவோவிற்கு, முன்னாள் சிஎஸ்கே ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினின் சாதனையை முறியடிக்க 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், இந்தாண்டு அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக விளையாட உள்ளார். அஸ்வின் சி.எஸ்.கே அணிக்காக இதுவரை 121 போட்டிகளில் 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிராவோ 103 போட்டிகளில் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது பிராவோ ஐக்கிய அரபு அமீரகத்தில், கட்டாய ஏழு நாள் தனிமைப்படுத்தலில் இருக்கிறார். ஐபிஎல் 2020 போட்டிகள் நாளை (செப்டம்பர் 19) முதல் தொடங்க உள்ளது. 53 நாட்கள் நீடிக்கும் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது.


இந்த ஆண்டு ஐ.பி.எல்-இல், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்குபெறும். இந்த ஆண்டு துபாயில் 24 போட்டிகள், அபுதாபியில் 20 போட்டிகள் மற்றும் ஷார்ஜாவில் 12 போட்டிகள் நடைபெறும்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading