ஐ.பி.எல் 2020-ம் ஆண்டு தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் குவாலிபையர் சுற்றில் 2-வது போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணி சார்பில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அணியின் ஸ்கோர் 86 ஆக இருந்த நிலையில், ஸ்டானிஸ் 38 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களிமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம், தவன் 50 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.
ஸிம்ரான் ஹெட்மெயர் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 189 ரன்கள் குவித்தது.