ஐ.பி.எல் தொடரின் 55-வது போட்டியில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதின. ஃப்ளேஆப் சுற்றுக்குச் செல்ல இரண்டு அணிகளுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். இந்தநிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக தவன் மற்றும் பிரித்விஷா களமிறங்கினர். பிரித்வி ஷா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து, அஜிங்கியா ரஹானே களமிறங்கினார். தவன், ரஹானே இணை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர்.
தவன் 54 ரன்கள் எடுத்திருந்தநிலையில் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய ரஹானே அரைசதத்தைக் கடந்தார். அவரும் 60 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மீதி 20 ரன்கள் மட்டுமே தேவை என்றிருந்தநிலையில் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ரிஷப் பன்ட் இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி 17.3 ஓவருக்கு முன்னதாக வெற்றி பெற்றிருந்தால் பெங்களூரு அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். தற்போது, டெல்லி, பெங்களூரு இரு அணிகளும் ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.