விளையாட்டு

  • associate partner

பந்துவீச்சில் அசத்திய டெல்லி அணி: ராஜஸ்தான் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பந்துவீச்சில் அசத்திய டெல்லி அணி: ராஜஸ்தான் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
டெல்லி வீரர்கள்
  • Share this:
ஐ.பி.எல்லின் 30-வது போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் அதிரடியா ஆட்டத்தைத் தொடங்கினர். படலர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்க்க ஸ்டோக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, சாம்சனும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ராபின் உத்தப்பா நிதானமாக ஆடி 32 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.














ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading