விளையாட்டு

  • associate partner

ஐ.பி.எல் 2020 : இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார்? டெல்லி - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சனும் பார்மிற்கு திரும்பியுள்ளது ஐதராபாத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது

ஐ.பி.எல் 2020 : இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார்? டெல்லி - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை
SRH vs DC
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணியின் மோத உள்ள அணி எது என்பதை முடிவு செய்யும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற உள்ளது.

2020 ஐ.பி.எல். தொடர் கிளைமேக்சை நெருங்கி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் விளையாட மும்பை அணி முதல் அணியாக தகுதி பெற்று விட்டது. இந்த அணியுடன் மோதும் அணி எது என்பதை முடிவு செய்யும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி அபுதாபி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

டெல்லி அணியை பொறுத்த வரை பிளே ஆஃப் சுற்றுக்கே சுற்று போராடிதான் முன்னேறியது. கடைசியாக அந்த அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் கூட தனது முழு திறனை வெளிப்படுத்தவில்லை. அணியின் தொடக்க வீரர்களான பிருத்வி ஷா - தவண் ரன் அடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக மும்பைக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர்.


கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரின் பார்மும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பந்துவீச்சை நம்பி மட்டுமே டெல்லி அணி உள்ளது என்பதுதான் தற்போதைய உண்மை. நோர்க்கியா, ரபடா என அணியின் பவர் பிளே பந்துவீச்சாளர்கள் வலுவாக உள்ளனர். ரன்களை கட்டுப்படுத்தும் இவர்கள், விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறுவது பாதகம்தான். சுழற்பந்துவீச்சில் அஸ்வின் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அதுவும் கடந்த போட்டியில் மும்பையின் தொடக்க வீரர்களான டி காக் மற்றும் ரோஹித் சர்மாவை இவர் அவுட் ஆக்கிய விதம் அபாரம். எது எப்படி இருந்தாலும் முக்கியமான இன்றைய போட்டியில் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது டெல்லிக்கு கட்டாயம்.

நடப்பு தொடரில் கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணியாக உருவெடுத்துள்ளது ஐதராபாத். கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் அந்த அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அணியின் KEY PLAYER ஆக கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார். இவரது விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே எதிரணிக்கு வெற்றி என்று சொல்லும் அளவிற்கு இவர் அசத்தலான பார்மில் இருக்கிறார். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சனும் பார்மிற்கு திரும்பியுள்ளது ஐதராபாத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஜேசன் ஹோல்டர் மிரட்டி வருகிறார். இவர்கள் தவிர்த்து சந்தீப் சர்மா, மணீஷ் பாண்டே, ரஷித் கான், தமிழக வீரர் நடராஜன் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். காயத்தால் முந்தைய போட்டியில் விளையாடாத சாஹா இன்று களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் மோதிய 2 போட்டியிலும் ஐதராபாத்தே வாகை சூடியது. ஐ.பிஎல். தொடரை பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் 11 ஆட்டங்களிலும் டெல்லி 5 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்a
First published: November 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading