விளையாட்டு

  • associate partner

DCvsKXIP | பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு

பஞ்சாப் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்

DCvsKXIP | பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு
DCvsKXIP
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 10:55 PM IST
  • Share this:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி  157 ரன்கள்  எடுத்துள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 2-வது போட்டி துபாயில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினார்கள். தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்த வந்த ஷிம்ரன் ஹெட்மையர் 7 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.


டெல்லி அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. கேப்டன் ஷ்ரோயஸ் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி நிதானமாக விளையாடினர். கடைசி ஒவர்களில் பஞ்சாப் அணி பந்துவீச்சை சிதறடித்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.



டெல்லி அணியின்சார்பில் ஸ்டோனிக்ஸ் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading