தொடர்ந்து இரண்டாவது சதம்: தவன் அசத்தல் ஆட்டம் - 164 ரன்கள் குவித்த டெல்லி அணி

தொடர்ந்து இரண்டாவது சதம்: தவன் அசத்தல் ஆட்டம் - 164 ரன்கள் குவித்த டெல்லி அணி

ஷிகர் தவன்

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்துள்ளது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 38-வது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். பிரித்வி ஷா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் தலா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் ஷிகர் தவன் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  ஒரு புறம் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் தடுமாறாமல் அதிரடியாக விளையாடினார் ஷிகர் தவன். அதிரடியாக ஆடிய ஷிகர் தொடர்ந்து இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர், 61 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 106 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


  டெல்லி அணி ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  Published by:Karthick S
  First published:

  சிறந்த கதைகள்