முகப்பு /செய்தி /விளையாட்டு / அதிரடி காட்டிய ஷிகர் தவன்: மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்கு

அதிரடி காட்டிய ஷிகர் தவன்: மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்கு

மும்பை வீரர்கள்

மும்பை வீரர்கள்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

  • Last Updated :

ஐ.பி.எல் தொடரின் 27-வது போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். பிரித்வி ஷா 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்தநிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அஜய் ரஹானேவும் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடி 33 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஷிகர் தவன் 69 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநேர இறுதியில் டெல்லி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது.

SCHEDULE TIME TABLE:

PURPLE CAP:

மும்பை அணி சார்பில் குர்ணால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

top videos
    First published:

    Tags: IPL 2020