விளையாட்டு

  • associate partner

தவன், ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டம்: 161 ரன்கள் குவித்த டெல்லி அணி

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

தவன், ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டம்: 161 ரன்கள் குவித்த டெல்லி அணி
ஐ.பி.எல்
  • Share this:
ஐ.பி.எல்லின் 30-வது போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். பிரித்வி ஷா ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து ரஹானே களமிறங்கினார். அவரும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். தவன், ஸ்ரேயாஸ் அய்யர் இணையை ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். அதிரடியாக ஆடிய தவன் 33 பந்துகளில் 57 ரன்களைக் குவித்து ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார்.
ORANGE CAP:


PURPLE CAP:

மறுபுறம் நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் 53 ரன்கள் குவித்து கார்திக் தியாகி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 161 ரன்களைக் குவித்தது.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading