விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL IPL 2020 DEEPAK CHAHAR STARTS PRACTICE VJR

பயிற்சியை தொடங்கினார் சி.எஸ்.கே வீரர் தீபக் சஹர்

கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட தீபக் சஹர் மற்றும் ரித்துராஜ் ஆகிய இருவரும் இதுவரை பயிற்சியை தொடங்காமல் இருந்தனர்.

பயிற்சியை தொடங்கினார் சி.எஸ்.கே வீரர் தீபக் சஹர்
தீபக் சஹர்
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 3:38 PM IST
  • Share this:
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சி.எஸ்.கே வீரர் தீபக் சஹர் பயிற்சியை தொடங்கி உள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சி.எஸ்.கே வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். வீரர்கள் மத்தியில் கொரோனோ பரவலை தடுக்க  முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு முறை கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் சி.எஸ்.கே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் மற்றும் 12 நிர்வாகிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனால் சி.எஸ்.கே அணி வீரர்கள் அனைவரும் மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல் நீட்டிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நெகட்டிவ் வந்த வீரர்கள் கடந்த வாரம் பயிற்சியை தொடங்கினர். கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட தீபக் சஹர் மற்றும் ரித்துராஜ் ஆகிய இருவரும் இதுவரை பயிற்சியை தொடங்காமல் இருந்தனர்.இந்நிலையில் தீபக் சஹருக்கு மேலும் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு தொற்று இல்லை என உறுதியானதும் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. இதனையடுத்து சஹர் தனது அணியுடன் இன்று பயிற்சியில் ஈடுபட்டார். ரித்துராஜ்க்கு  இன்னும் முடிவு வரவில்லை எனவே தொடர்ந்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading