விளையாட்டு

  • associate partner

CSKvsDC | ஃபீல்டிங்கில் கோட்டை விட்ட சி.எஸ்.கே... சதம் விளாசிய தவான்.. டெல்லி அணி அபார வெற்றி

CSKvsDC | ஃபீல்டிங்கில் கோட்டை விட்ட சி.எஸ்.கே... சதம் விளாசிய தவான்.. டெல்லி அணி அபார வெற்றி
CSKvsDC
  • Share this:
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண் மற்றும் டூ-பிளசிஸ் களமிறங்கினார்கள். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சாம் கரண் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து களமிறங்கிய வாட்சன், டூ-பிளசிஸ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினார்.


சென்னை அணி 87 ரன்கள் எடுத்திருந்த போது வாட்சன் 36 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய டூ-பிளசிஸ் 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ராபடா பந்துவீச்சில் அவுட்டாகினார்.
கேப்டன் மகேந்திர சிங் தோனி வெறும் 3 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

அம்பதி ராயுடு மற்றும் ஜடேஜா இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் சி.எஸ்.கே ரன்ரேட் அதிகரித்தது. இறுதியாக சி.எஸ்.கே அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. ராயுடு 25 பந்துகளுக்கு 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்திவி ஷா தீபக் சாஹர் பந்துவீச்சில் டக் அவுட்டாகினார். அடுத்து களமிறங்கிய ராஹானேவும் 8 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தது சி.எஸ்.கே அணிக்கு சிறப்பான அடித்தளமாக இருந்தது.

ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஷிகார் தவான் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்னிலும் அவுட்டாகினர். அரைசதம் கடந்தும் தவான் நிலைத்து நின்று விளையாடியதால் டெல்லி அணியின் ரன்குவிப்பை சி.எஸ்.கே அணியால் தடுக்க முடியவில்லை.

தவானின் 4 கேட்ச்களை சி.எஸ்.கே வீரர்கள் தவறவிட்டது மிகப் பெரிய பின்னடைவாக இருந்தது. சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தவானின் ஒரு கேட்சை தவறவிட்டார். இன்றையப் போட்டியில் சி.எஸ்.கே அணி ஃபீல்டிங் மிகவும் சொதப்பலாக அமைந்தது. போட்டிப் போட்டுக் கொண்டு கேட்ச், ரன் அவுட்டை சி.எஸ்.கே வீரர்கள் கோட்டை விட்டனர்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஷிகார் தாவன் சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்ஷர் படேல் 3 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியை டெல்லி அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading