விளையாட்டு

  • associate partner

தொடர் தோல்வியில் சன்ரைசர்ஸ்: 3-வது வெற்றியை நோக்கி டெல்லி: அணிகள் என்னென்ன மாற்றங்களுடன் களமிறங்குகின்றன?

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் இரு அணியில் களமிறங்கும் வீரர்களில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தொடர் தோல்வியில் சன்ரைசர்ஸ்: 3-வது வெற்றியை நோக்கி டெல்லி: அணிகள் என்னென்ன மாற்றங்களுடன் களமிறங்குகின்றன?
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 2:12 PM IST
  • Share this:
ஐபிஎல் 2020ன் 11வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் மோத உள்ளனர். இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டமானது இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ், தனது மூன்றாவது வெற்றியை ருசி பார்க்க காத்திருக்கிறது. டெல்லி அணி தொடக்க போட்டிகள் இரண்டையும் வென்றிருந்தாலும், அவர்களின் போட்டியின் தொடக்கமானது எளிதான ஒன்றல்ல.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், காயம் ஏற்பட்டதன் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் அஸ்வின் பங்கேற்க மாட்டார் என்றே  எதிர்பார்க்கப்படுகிறது. சிம்ரான் ஹெட்மேயர், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் போன்ற நடுத்தர வரிசையில் களமிறங்குபவர்கள், வேகமான பந்துகளை அபுதாபி மைதானத்தில் சரியாக கையாள வேண்டும்.

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அமோகமாக விளையாடி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அஸ்வினின் வெற்றிடத்தை சிறப்பாக நிரப்பி வருகிறார்.


மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்பது சிந்திக்க வேண்டும். டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரை வெளியேறிவிட்டால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் போராடி வருகின்றனர்.

ஹைதராபாத் அணியில் நியூசிலாந்து கேப்டனான கேன் வில்லியம்சனை விளையாட செய்யும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். மேலும், முகமது நபியை நடுத்தர வீரர்கள் வரிசையில் இறக்கலாம். ஹைதராபாத் அணியின் வெளிநாட்டு தலைமை வீரர்களான வார்னர் மற்றும் பைர்ஸ்டோவும் டெல்லி அணிக்கு எதிராக தங்கள் அணியை வழிநடத்த வேண்டும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் 11 வீரர்கள் :MOST SIXES:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மியர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோயினிஸ், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் / இஷாந்த் சர்மா ஆகியோர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 11 வீரர்கள் :
RESULT DATA:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே, பிரியாம் கார்க், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), முகமது நபி / கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கே கலீல் அகமது, டி நடராஜன் ஆகியோர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading