விளையாட்டு

  • associate partner

DCvsKXIP | சூப்பர் ஓவரில் 2 ரன் அடித்த பஞ்சாப்... டெல்லி த்ரில் வெற்றி

பஞ்சாப் அணியின் மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் பொறுப்புடனும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

DCvsKXIP | சூப்பர் ஓவரில் 2 ரன் அடித்த பஞ்சாப்... டெல்லி த்ரில் வெற்றி
DCvsKXIP
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 11:45 PM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்று தனது முதல் வெற்றி கணக்கை தொடங்கி உள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 2-வது போட்டி துபாயில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினார்கள். தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்த வந்த ஷிம்ரன் ஹெட்மையர் 7 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.


 

டெல்லி அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. கேப்டன் ஷ்ரோயஸ் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி நிதானமாக விளையாடினர். அணிக்கு நம்பிக்கையாக விளையாடிய வந்த ஷ்ரோயஸ் ஐயர் 39 ரன்னிலும், பந்த் 31 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இந்தப் போட்டியின் திருப்புமுனையாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டம் அமைந்தது. 21 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகள் பறக்கவிட்ட ஸ்டாய்னிஸ் 53 ரன்களில் அவுட்டானார். கடைசி ஒவர்களில் பஞ்சாப் அணி பந்துவீச்சை சிதறடித்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.டெல்லி அணியின்சார்பில் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே தடுமாற்றமாகவே அமைந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களில் அவுட்டானார். அவரை அடுத்து வந்த கருண் நாயார், நிக்கோலஸ் பூராண், கிளன் மெக்ஸ்வேல் ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகி வெளியேறினர். பஞ்சாப் அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பஞ்சாப் அணியின் மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் பொறுப்புடனும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மயங்க் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி விக்கெட்டை பறிகொடுத்ததால் போட்டி சூப்பர் ஒவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட்களை பறிகொடுத்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.எல்.ராகுல் 2 ரன்னிலும், நிக்கோலஸ் பூரான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். டெல்லி அணியில் சூப்பர் ஓவரை ராபடா வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். பஞ்சாப் அணி சார்பில் சூப்பர் ஓவரை முகமது ஷமி வீசினார். சூப்பர் ஒவரை எதிர்கொண்ட டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading