விளையாட்டு

  • associate partner

ஐபிஎல் 2020 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களின் முழுமையான பட்டியல்!

IPL 2020 | Delhi Capitals | ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், ரிக்கி பாயிண்டிங் இந்த ஆண்டு டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார்.

ஐபிஎல் 2020 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களின் முழுமையான பட்டியல்!
டெல்லி அணி
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 2:29 PM IST
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடர் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில் டெல்லி அணியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதன்முறையாக ஐ.பி.எல் கோப்பையை டெல்லி அணி கையில் ஏந்தும் ஆர்வத்தில் அந்த அணி வீரர்கள் உள்ளனர்.

ஐ.பி.எல் தொடர் 2008-ல் தொடங்கிய போது டெல்லி டேர்டெவில்ஸ் என்று பெயரிடப்பட்ட டெல்லி அணி, பின்னர் 2019 டிசம்பரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  இதுவரை டெல்லி அணியின் கணக்கில் எந்த வெற்றியும் இல்லாத நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் என்று பெயரிட்டு மீண்டும் களத்தில் இறங்கினர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பிளேஆஃப்களில் கூட முன்னேற தவறிவிட்டனர்.

அவர்கள் கடைசியாக பிளே-ஆஃப்களுக்கு தகுதி பெற்ற ஆண்டு 2012ம் ஆண்டு ஐ.பி.எல் தான். அதன்பின் 2019ல் டெல்லி கேப்பிடல்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்தது. இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது.  நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் இருவரான, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் டெல்லி அணியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.


கடந்த சீசனுக்கும் கேப்டனாக இருந்த இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த அணிக்கு தலைமை தாங்குவார். மேலும் காயமடைந்த ஜேசன் ராய்க்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸை மாற்றம் செய்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், ரிக்கி பாயிண்டிங் இந்த ஆண்டு டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஐ.பி.எல் 202 தொடரில் டெல்லி அணியில் விளையாட உள்ள வீரர்கள்

பேட்ஸ்மேன்கள்அஜின்கியா ரஹானே
பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)

பந்து வீச்சாளர்கள்

அமித் மிஸ்ரா
அவேஷ் கான்
ஹர்ஷல் படேல்
மோஹித் சர்மா
ரவிச்சந்திரன் அஸ்வின்
துஷார் தேஷ்பாண்டே

ஆல்ரவுண்டர்கள்

ஆக்சர் படேல்
லலித் யாதவ்

விக்கெட் கீப்பர்

ரிஷாப் பந்த்

வெளிநாட்டு வீரர்கள்

சிம்ரான் ஹெட்மியர் (பேட்ஸ்மேன்)
அன்ரிச் நார்ட்ஜே (பவுலர்)
ககிசோ ரபாடா (பவுலர்)
கீமோ பால் (ஆல்ரவுண்டர்)
சந்தீப் லாமிச்சேன் (பவுலர்)
அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆல்ரவுண்டர்)
டேனியல் சாம்ஸ் (ஆல்ரவுண்டர்)
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading