ஐபிஎல் 2020 : சாம்சன் அடித்த பந்தை அசாதாரணமாக ஒரு கையில் பிடித்த தோனி (வீடியோ)

ஐபிஎல் 2020 : சாம்சன் அடித்த பந்தை அசாதாரணமாக ஒரு கையில் பிடித்த தோனி (வீடியோ)

ஐபிஎல் 2020

சாம்சன் பேட்டிங்கின் போது சாஹர் வீசிய பந்தை மிகவும் லாவகமாக ஒன் ஹாண்ட் கேட்ச் செய்து சாம்சனை டக் அவுட் செய்தார் விக்கெட் கீப்பரான தோனி.

 • Share this:
  துபாயில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே-வை ராஜஸ்தான் அணி தோற்கடித்தது. 

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் மந்தமாக விளையாடியது தான் அவர்களின் தோல்விக்கு காரணம். ஆனால் சஞ்சு சாம்சனை டக் அவுட் செய்த எம்.எஸ்.தோனியின் ஒரு ஹாண்ட் கேட்ச் சி.எஸ்.கேவுக்கு கிடைத்த சில பிரகாசமான இடங்களில் ஒன்றாகும்.
  ஐ.பி.எல் 2020ல் தற்போது சிஎஸ்கே அணி ஏழு போட்டிகளில் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளை இழந்தநிலையில் உள்ளது.

  ALSO READ |  யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

  இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமான ஒன்று. நேற்றைய ஆட்டத்தில், சி.எஸ்.கேக்கு இந்த கேட்ச் கிடைத்தது நல்ல தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. அப்போது ராஜஸ்தான்
  ராயல்ஸ் அணி ஐந்து ஓவர்களில் 28/3 என்ற செட் கணக்கில் இருந்தனர். ஆர்.ஆர் அணியின் ஒரு நல்ல தொடக்க ஆட்டத்தின் நடுவில், தீபக் சாஹர் பென் ஸ்டோக்ஸையும் , ஜோஷ் ஹேசில்வுட் ராபின் உத்தப்பாவையும் அவர்களது ஓவரில் வீழ்த்தினர்.

  இந்நிலையில், சாம்சன் பேட்டிங்கின் போது சாஹர் வீசிய பந்தை நேர்த்தியாக அடிக்க முயன்றார். ஆனால், அது தோனியின் கைக்குச்  சென்றது. அதனை மிகவும் லாவகமாக ஒரு கையில் கேட்ச் செய்து சாம்சனை டக் அவுட் செய்தார் விக்கெட் கீப்பரான தோனி.

     இது பந்து வீச்சாளருக்கும் அணிக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சிஎஸ்கேவுக்கு நல்ல தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. போட்டியைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை
  சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் விளையாடி 48 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.  இந்த வெற்றி ஆர்.ஆர் அணிக்கு பிளே-ஆஃப்-ல் நுழையும்
  நம்பிக்கையை தந்துள்ளது. அதே நேரத்தில் தங்கள் எதிர் அணிகளை
  வெளியேற்றும் விளிம்பிற்கு வந்துவிட்டது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

  ALSOR READ |  ஜாதவ்னாலதான் ஸ்கோர் கம்மி ஆச்சு அப்படித்தானே.. இணையத்தில் வைரலாகும் சி.எஸ்.கே மீம்ஸ்..

  பந்து வீச்சுக்கு அழைக்கப்பட்ட பின்னர் ஆர்.ஆர் மூன்று முறை சாம்பியனான சி.எஸ்.கேவை ஐந்து விக்கெட்டுக்கு 125 ரன்களில் சுருட்டினர். பின்னர் 17.3 ஓவர்களில் இலக்கை ராஜஸ்தான் அணி வென்றது.

  பட்லர் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (26) இடையேயான பார்ட்னெர்ஷிப் மூலம் 98 ரன்கள் ராஜஸ்தான் அணி குவிந்தது.
  பட்லருக்கு நேற்று ஒரு சிறந்த நாளாக மாறியது. அவர் நம்பமுடியாத கேட்சுடன் ஃபாஃப் டு பிளெசிஸை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

     ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: