விளையாட்டு

  • associate partner

CSKvsDC | ஆரம்பத்தில் மந்தம்.. இறுதியில் அதிரடி... சி.எஸ்.கே 179 ரன்கள் குவிப்பு

IPL 2020 | CSKvsDC

CSKvsDC | ஆரம்பத்தில் மந்தம்.. இறுதியில் அதிரடி... சி.எஸ்.கே 179 ரன்கள் குவிப்பு
  • Share this:
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியான ஆட்டத்தால் சி.எஸ்.கே அணி 179 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண் மற்றும் டூ-பிளசிஸ் களமிறங்கினார்கள். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சாம் கரண் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து களமிறங்கிய வாட்சன், டூ-பிளசிஸ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினார்.


சென்னை அணி 87 ரன்கள் எடுத்திருந்த போது வாட்சன் 36 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய டூ-பிளசிஸ் 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ராபடா பந்துவீச்சில் அவுட்டாகினார்.
கேப்டன் மகேந்திர சிங் தோனி வெறும் 3 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

அம்பதி ராயுடு மற்றும் ஜடேஜா இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் சி.எஸ்.கே ரன்ரேட் அதிகரித்தது. இறுதியாக சி.எஸ்.கே அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. ராயுடு 25 பந்துகளுக்கு 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading