சி.எஸ்.கே அணியில் அதிரடி மாற்றம் - வியூகம் வகுத்த எம்.எஸ்.தோனி

தோனி

IPL 2020 | இன்றையப் போட்டியில் நிகிடிக்கு பதிலாக ஹேசில்வுட் களமிறங்குவார் என்று தோனி தெரிவித்துள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  ஐ.பி.எல் 2020 தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  ஐ.பி.எல் 13-வது சீசனின் 7-வது போட்டியில் டெல்லி கேப்பிடள்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

  டாஸூக்கு பின் பேசிய மகேந்திர சிங் தோனி, “போட்டியில் வானிலையும் ஒரு அங்கமாக உள்ளது. மாலையில் பனிபொழிவது பவுலிங் வீச சற்று சிரமமாக இருக்கும். இராண்டவது பேட்டிங் செய்யும் அணி தவறு செய்தால் வெற்றி பெற வாய்ப்பில்லை. டிவியில் பார்த்தவரை 2-வது பேட்டிங் செய்வது சரியாக உள்ளது. சில விக்கெட்கள் போட்டியை மந்தநிலைக்கு கொண்டு செல்கிறது. ப்ளே ஆப்-க்கு முந்தைய 14 போட்டிகளிலும் யாராலும் வெல்ல முடியாது. கடைசி போட்டியில் 200 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இன்றையப் போட்டியில் நிகிடிக்கு பதிலாக ஹேசில்வுட் களமிறங்குவார்“ என்று தெரிவித்தார்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் (விளையாடும் லெவன்): முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளெசிஸ், சாம் குர்ரான், ருதுராஜ் கெய்க்வாட், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஜோஷ் ஹேஷில்வுட், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா

  லுங்கி நிகிடி கடந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசாத காரணத்தால் அவரை நீக்கிவிட்டு ஹேஷில்வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பதி ராயுடு, பிராவோ இருவரும் இன்றைய அணியில் இடம்பெறவில்லை. அம்பதி ராயுடு காயம் குணமடைந்தாலும் அடுத்தப் போட்டியிலும் களமிறங்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

   
  Published by:Vijay R
  First published: