சி.எஸ்.கே-வின் அடுத்த கேப்டன்... தோனியின் மனதில் உள்ளது யார்? பிராவோ பதில்

தோனி

IPL 2020 | சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் தொடரில் அடுத்த 2 சீசன்கள் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

 • Share this:
  சி.எஸ்.கே-வின் அடுத்த கேப்டன் யார் என்பது தோனியில் மனதில் ஏற்கனவே உள்ளது என்று பிராவோ தெரிவித்துள்ளார்.

  ஐ.பி.எல் ஆரம்பித்தது முதல் ஒரு அணிக்கு ஒருவரே கேப்டனாக நீடிப்பது தோனி மட்டும் தான். 2008-ம் ஆண்டு ஆரம்பித்த ஐ.பி.எல் தொடர் முதல் தற்போது வரை தோனி மட்டுமே சி.எஸ்.கே அணியின் கேப்டனாக இருந்துள்ளார். சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட காலத்தில் மட்டும் தோனி புனே அணியின் கேப்டனாக இருந்தார்.

  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் தொடரில் அடுத்த 2 சீசன்கள் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த முடிவை தோனியே எடுக்கும்பட்சத்தில், தோனிக்கு பின் சி.எஸ்.கே அணியை யார் வழிநடத்துவார்கள் என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.  இது தொடர்பாக பிராவோ அளித்த பேட்டி ஒன்றில், “தோனியுடன் சிறிது காலமாக இருப்பதால் அவரின் மனதில் இருப்பதை நான் அறிவேன். நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒதுங்க தான் வேண்டும். சி.எஸ்.கே-வில் தனது வாரிசு குறித்து தோனியின் திட்டங்களை கேட்டப் போது, அது ஏற்கனவே அவரது மனதில் உள்ளது. அது ரெய்னா அல்லது ஒரு இளையவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாகவே அது இருந்தது“ என்றார்.
  Published by:Vijay R
  First published: