• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தல தோனிக்கு அடிமேல் அடி.. என்ன செய்ய போகிறார்?

தல தோனிக்கு அடிமேல் அடி.. என்ன செய்ய போகிறார்?

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

IPL 2020 : ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

  • Share this:
சி.எஸ்.கே என்றாலே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது தல தோனி, சின்ன தல ரெய்னா. இவர்களை தாண்டி பேட்டால் வாள்வீசும் ஜட்டு, புலவர் போல் தமிழில் டிவிட்டுகளை பறக்கவிடும் தமிழ்புலவர் பஜ்ஜி.  இவர்கள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உணர்வுகள். மைதானத்தில் இவர்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு  அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாக குரல் விண்ணை முட்டும்.

மைதானத்தில் சின்ன தல ரெய்னா பேட்டாலும், ஃபீல்டிங்காலும் சென்னை ரசிகர்களை எப்படி கட்டிப்போட்டாரோ அதே போல் தூய தமிழ் டிவீட்டுகளால் புலவராக அனைவரையும் இணையத்தில் கட்டிப்போட்டவர் ஹர்பஜன். இவர்கள் இருவரையும் மஞ்சள் ஜெர்ஸியில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் பார்க்க முடியாது என்பதை ரசிகர்களால்  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தல தோனிக்கு நிகராக அணியின் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் சின்ன தல ரெய்னா விலகியது தலைக்கு முதல் அடியாக அமைந்தது. பிறகு ரசிகர்களை இணையத்திலும், மைதானத்திலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் பஜ்ஜி விலகியது தலைக்கு மற்றொரு அடி. இவர்கள் இல்லாமல் போட்டியை உயிர்ப்புடன் நகர்த்தும் வித்தையை  தல தோனி கற்றிருக்கிறாரா?

சி.எஸ்.கே அணி நிர்வாகமோ தல தோனியை மலைபோல் நம்பியுள்ளது. இதற்கு சான்றுதான் டிவிட்டரில் ரசிகரின் கேள்விக்கு அணி நிர்வாகம் அளித்த பதில். Vice கேப்டன் யார் என்ற கேள்விக்கு Wise கேப்டன் இருக்க பயமேன் என்று பதலளித்து இருந்தனர்.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவை அனைத்தும் தல என்னும் ஒற்றை மனிதருக்கு கிடைத்தது அல்ல. குடும்பமாக இருக்கும் சி.எஸ்.கே அணிக்கு கிடைத்த பரிசு.



இதை தக்கவைக்க தல தோனியின் சாமர்த்தியமாக கேப்டன்ஷிப்பையும் தாண்டி வேறு ஒரு மேஜிக் தேவைப்படுகிறது. அதை நடப்பு தொடரில் வெளிக்கொண்டு வருவாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: