விளையாட்டு

  • associate partner

கேதர் ஜாதவிற்கு சி.எஸ்.கே அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன்?

டி20 போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய தருணத்தில் இறுதி ஓவர்களில் கூட கேதர் ஜாதவ் பொறுமையாக விளையாடி ரசிகர்களின் கோபத்தை பெற்றிருந்தார்.

கேதர் ஜாதவிற்கு சி.எஸ்.கே அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன்?
கேதர் ஜாதவ்
  • Share this:
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பியூஷ் சாவ்லாவிற்கு பதிலாக கேதர் ஜாதவிற்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மேலும் சி.எஸ்.கே அணியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றிருந்த பியூஷ் சாவ்லாவிற்கு பதிலாக கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த தொடரில் கேதர் ஜாதவின் பேட்டிங் சரியாக அமையாததால்  மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.


டி20 போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டிய தருணத்தில் இறுதி ஓவர்களில் கூட கேதர் ஜாதவ் பொறுமையாக விளையாடி ரசிகர்களின் கோபத்தை பெற்றிருந்தார். இதனால் சி.எஸ்.கே அணியில் கடந்த ஒரிரு போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 7 பவுலர்கள் சி.எஸ்.கே அணியில் பந்துவீசினார்கள். கர்ன் சர்மா, பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்து இருந்தனர்.

துபாய் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றாற்போல் இருந்ததால் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர். இன்றையப் போட்டி ஷார்ஜா மைதனாத்தில் நடைபெறுவதால் பேட்ஸ்மேன்கள் பங்கு அதிகமாக இருக்கும். அதனால் ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக இருந்தால் சி.எஸ்.கே அணிக்கு சற்று பலமாக இருக்கும் என்பதால் கேதர் ஜாதவிற்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியான முறையில் தக்கவைத்துக் கொண்டால் வரும் போட்டிகளில் அவர் சி.எஸ்.கே அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading