விளையாட்டு

  • associate partner

சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்... களமிறங்கும் 11 வீரர்கள் யார்?

IPL 2020 | CSK | 2008-ம் தொடங்கிய ஐ.பி.எல் தொடர் முதன்முறையாக ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.

சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்... களமிறங்கும் 11 வீரர்கள் யார்?
சென்னை அணி
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 2:27 PM IST
  • Share this:
சி.எஸ்.கே அணியின் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாத நிலையில் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியை சென்னை எதிர்கொள்ள உள்ளது.

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெரும் பரபரப்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஐ.பி.எல் 13-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. அபுதாபயில் நடைபெற உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வை அறிவித்த பின் ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் தொடர் முதன்முறையாக ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.


சி.எஸ்.கே துணை கேப்டன் ரெய்னா, மூத்த வீரர் ஹர்பஜன் சிங் அணியிலிருந்து விலகி உள்ள நிலையில் அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹர்பஜன் சிங் இடத்தை பியூஷ் சாவ்லா நிரப்புவார். 3-வது இடத்தில் இறங்கும் சுரேஷ் ரெய்னா இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் டூப்ளெசிஸ் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



சி.எஸ்.கே உத்தேச அணி

ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, டூப்ளெசிஸ், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், சர்துல் தாகூர், இம்ரான் தாஹீர்/ லுங்கி நிகடிதொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் உடன் அம்பாதி ராயுடு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா மற்றும் பிராவோ என 2 ஆல்ரவுண்டர்கள் அணியில் பலம் சேர்ப்பார்கள். மேலும் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடியும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இம்ரான் தாஹீருக்கு பதிலாக லுங்கி நிகடியை அணியில் சேர்க்கவும் வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் சாவ்லா மற்றும் இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா ஜாலம் காட்டினால் சி.எஸ்.கே அணியின் வெற்றி உறுதியாகும்.
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading