இறுதிவரை போராடிய தோனி: பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்- 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி

தோனி ஜடேஜா

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 14-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களைக் குவித்தனர். அதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டூப்ளஸிஸ் களமிறங்கினர். ஷேன் வாட்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த அம்பதி ராயுடு 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மறுபுறம் நிதானமாக ஆடிய டூப்ளிஸிஸ் 22 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர், ஜோடி சேர்ந்த தோனி, ஜடேஜா இணை நிதானமாக ஆடி விக்கெட் இழப்பைக் கட்டுப்படுத்தினர்.

  ஆனால், ரன்கள் சேர்க்கத் தடுமாறினர். ஆட்டம் இறுதியை நெருங்கும் அதிரடியைத் தொடங்கிய ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம், தோனி அடித்து விளையாடி முயன்றார். ஆனால், பந்து பேட்டில் சரியாக படாத நிலையில் அவரால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. சாம்குரான் அவர் பங்குக்கு 5 பந்துகளில் 15 ரன்களைக் எடுத்தார்.

  SCHEDULE TIME TABLE:
  ORANGE CAP:

  36 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநேர இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன்மூலம் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  Published by:Karthick S
  First published: