விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL IPL 2020 CHENNAI SUPER KINGS BOWLER STAFF MEMBERS TEST POSITIVE FOR COVID 19 1 VJR

துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா

சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சாளர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வீரர்களின் வலைப்பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரேனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பயிற்சி மேற்கொண்டனர்.

அதன்பின் 21-ம் தேதி சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் சி.எஸ்.கே வீரர்கள் மற்றும் ஊழியர்கள் துபாய்க்கு சென்றனர். இதற்குமுன் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா நெகடிவ் வந்தது.
துபாய் சென்ற சி.எஸ்.கே வீரர்கள், ஊழியர்கள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். துபாயில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் சி.எஸ்.கே அணியின் பந்து வீச்சாளர் உட்பட ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து சி.எஸ்.கே அணியின் மற்ற வீரர்களை மேலும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 1-ம் தேதி பயிற்சியை தொடங்க இருந்த சி.எஸ்.கே, தற்போது அதை ஒத்திவைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading