விளையாட்டு

  • associate partner

அம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே

IPL 2020 | CSKvsMI | ஒருபுறம் அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாட மறுபுறம் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்தனர்.

அம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே
MIvCSK (நன்றி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 11:22 PM IST
  • Share this:
அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியல் மும்பை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி வீழ்த்தியது.

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பெரும் பரபரப்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஐ.பி.எல் 13-வது சீசன் இன்று தொடங்கியது. அபுதாபயில் தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மாலையில் பனிப்பொழிவு இருப்பதால் முதலில் பந்துவீசுவது எளிதாக இருக்கும் என்று தோனி கூறினார்.


மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினார். முதல் ஓவரை வீசிய சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்டரி விளாசி அதிரடியை ஆரம்பித்தார்.
மும்பை அணி 46 ரன்கள் எடுத்திருந்த போது பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ரோஹித் சர்மா 12 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் டி-காக் 33 ரன்னில் ஷேம் குரான் பந்துவீச்சில் அவுட்டானார். மும்பை அணி அதிரடியாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் சி.எஸ்.கே பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்தினர்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக சவுரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில், லுங்கி நிகிடி 3 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், முரளி விஜய் களமிறங்கினர். வாட்சன் 4 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். சி.எஸ்.கே 6 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அம்பாதி ராயுடு மற்றும் டூ-பிளெசிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.ஒருபுறம் அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாட மறுபுறம் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்தனர். அம்பாதி ராயுடு 48 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 71 ரன்கள் குவித்து அவுட்டானார். அம்பாதி ராயுடுவின் அதிரடியான ஆட்டத்தால் சி.எஸ்.கே அணி எளிதாக வெற்றி இலக்கை எட்ட முடிந்தது.


இறுதியாக சி.எஸ்.கே 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. புள்ளிப்பட்டியலில் வெற்றி கணக்குடன் உள்ளே நுழைந்துள்ள சி.எஸ்.கே அணி முதலிடத்தில் தற்போது உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் மோத உள்ளன.

First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading