சூப்பர் ஓவர் த்ரில் ஆட்டம்: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

சூப்பர் ஓவர் த்ரில் ஆட்டம்: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

ஏபி டிவில்லியர்ஸ்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

  • Share this:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தனர். மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் குயின் டிகாக் களமிறங்கினார். ரோஹித் 8 ரன்களிலும், டிகாக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனையடுத்து, களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.

பின்னர், களமிறங்கிய இஷான் கிஷான் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பாண்டியாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர், ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பொல்லார்ட் இணை பெங்களூரு அணியின் பந்துகளை நாலாப்புறம் சிதறடித்தனர்.
PURPLE CAP:
MOST SIXES:
அதிரடியாக ஆடிய இஷான், 58 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 24 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 201 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிராவானது. அதனையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்செய்த மும்பை அணி வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் சார்பில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி இறங்கினார். மும்பை அணி சார்பில் பும்ரா பந்து வீசினார். சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
Published by:Karthick S
First published: