பந்து வீச்சில் அசத்திய டெல்லி வீரர்கள்: 152 ரன்கள் மட்டுமே குவித்த பெங்களூரு

டெல்லி வீரர்கள்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 55-வது போட்டியில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதின. ஃப்ளேஆப் சுற்றுக்குச் செல்ல இரண்டு அணிகளுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். இந்தநிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பிலிப்பி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் பிலிப்பி ஆட்டமிழந்தார். அதனையடுத்து, கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

  கோலி, படிக்கல் இணை நிதானமாகவே ரன்களை எடுத்தனர். 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தநிலையில் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக ஆடிய படிக்கல் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஏபிடி தொடக்கம் முதலே அடித்துவிளையாட முயன்றாலும் அவரால் பவுண்டரிகளை விரட்ட முடியவில்லை.
  POINTS TABLE:

  SCHEDULE TIME TABLE:

  ORANGE CAP:

  PURPLE CAP:

  RESULT DATA:

  MOST SIXES:
  அவர், 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன்அவுட்டானார். ஆட்டநேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே பெங்களூ அணி எடுத்தது.
  Published by:Karthick S
  First published: