HOME»NEWS»SPORTS»ipl ipl 2020 bengaluru scored 120 runs against hyderabad skd

பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்: 120 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு அணி

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்: 120 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு அணி
ஹைதராபாத் வீரர்கள்
  • Share this:

ஐ.பி.எல் தொடரின் 52-வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பிலிப்பி மற்றும் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 5 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலியும் 7 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸும் 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். வாஷிங்டன் சுந்தரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், பெங்களூரு அணி ரன்களைக் குவிக்க முடியாமல் தடுமாறியது. பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Published by:Karthick S
First published: