சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo, இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பார்ட்னராக இருக்காது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கான ஏலத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
"இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எடுப்பதற்கு நாங்கள் பரிசீலித்து வருகிறோம், ஏனெனில் பதஞ்சலி பிராண்டுக்கான உலகளாவிய மார்கெட்டிங் தளத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்" என்று பதஞ்சலி செய்தித்தொடர்பாளர் எஸ்.கே.திஜராவாலா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) ப்ராண்ட் மார்க்கெட்டிங் கோரிக்கையை வைக்க பதஞ்சலி பரிசீலித்து வருவதாக திஜராவாலா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சராக இருந்தால், ஐ.பி.எல்-ஐ விட பதஞ்சலிக்கு அதிகம் நன்மை இருக்கிறது. ”பிராண்டுகளுக்கு இடையில் போட்டி இருக்கும் என்றாலும், பதஞ்சலி டைட்டில் ஸ்பான்சர், சீனாவுக்கு எதிரான மனநிலை நிலவுவதால், தேசியவாத கண்ணோட்டத்தில் சூழலுக்கு உகந்ததாக இருக்கும்” என பிராண்ட்டுகளுக்கான யுக்தி நிபுணரான ஹரிஷ் பிஜூர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020-க்கு Vivo டைட்டில் ஸ்பான்சராக இருக்காது என்பதை ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிசிசிஐ உறுதிப்படுத்தியது. எனினும் அடுத்த ஆண்டின் முக்கிய ஸ்பான்சராக Vivo இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதிய ஸ்பான்சரிடமிருந்து பிபிசிஐ, அதிகபட்சமாக ரூ. 300 கோடி வருமானம் ஈட்டக்கூடும் என்று MoneyControl.com தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baba Ramdev, BCCI, IPL 2020, Patanjali, VIVO