விளையாட்டு

  • associate partner

51 வயதிலும் அசாத்தியமாக பாய்ந்து கேட்ச் பிடித்து மிரட்டிய ஜாண்டி ரோட்ஸ் - வைரல் வீடியோ

IPL 2020 : 51 வயதிலும் இளம் வீரர்களுக்கு இணையாக ஜாண்டி ரோட்ஸ் டைவ் அடிப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

51 வயதிலும் அசாத்தியமாக பாய்ந்து கேட்ச் பிடித்து மிரட்டிய ஜாண்டி ரோட்ஸ் - வைரல் வீடியோ
ஜாண்டி ரோட்ஸ்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 11:27 AM IST
  • Share this:
ஐ.பி.எல் 2020 பயிற்சியின் போது ஜாண்டி ரோட்ஸ் டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரர்களில் ஒருவர் ஜாண்டி ரோட்ஸ். தனது அசாத்தியமான ஃபீல்டிங்க் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். தென்னாப்பிரிக்கா அணிக்காக 1992-ம் ஆண்டு முதல் 2003-ம் வரை விளையாடி உள்ளார்.

1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இன்சமாம் உல்-ஹக்கை பாய்ந்து சென்று அவர் ரன் அவுட்டாக்கிய விதம் இன்றளவும் வியக்க வைக்கும் ஒன்றும். அந்த காட்சிகளும், நினைவுகளும் ரசிகர்களின் மனதிலிருந்து என்றும் நீங்காத ஒன்றாக இருக்கும்.


ஜாண்டி ரோட்ஸ் இருக்கும் திசையில் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கவே பயந்த காலங்கள் உள்ளது. ப்ல்டிங்கின் மூலம் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்ட ஜாண்டி ரோட்ஸ் தற்போது பஞ்சாப் அணியின் ஃப்ல்டிங் பயிற்சியளாராக உள்ளார்.

ஐ.பி.எல் 2020 தொடரில் விளையாட உள்ள பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஜாண்டி ரோட்ஸ் பயிற்சியளித்து வருகிறார். பயிற்சியின் போது கேட்சை எப்படி பிடிக்க வேண்டுமென்று அவரே செய்து காட்டினார். அப்போது தூரத்தில் அடிக்கப்பட்ட பந்தை  டைவ் அடித்த லாவகமாக கேட்ச் பிடித்தார்.இந்த வீடியோவை பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 51 வயதிலும் இளம் வீரர்களுக்கு இணையாக ஜாண்டி ரோட்ஸ் டைவ் அடிப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அவரது திறைமையை பாராட்டி பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் (செப்.19) அபுதாபியில் உள்ள மைதானத்தில ்நடைபெற உள்ளது. மும்பை, சென்னை அணிகள் முதல் போட்டியில் உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி நடக்க உள்ள 2-வது போட்டியில் பஞ்சாப் அணி டெல்லியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading